பல அரச வாகனங்களை பயன்படுத்தும் உயர் அரசாங்க அதிகாரி - பேரப்பிள்ளைகளுக்கும் வழங்கியதாக தகவல்

பல அரச வாகனங்களை பயன்படுத்தும் உயர் அரசாங்க அதிகாரி - பேரப்பிள்ளைகளுக்கும் வழங்கியதாக தகவல்

இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், முறையற்ற வகையில் பயன்படுத்தப்படும் அரச வாகனங்கள் தொடர்பில் அதிகம் பேசப்படுகிறது.

இந்நிலையில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர், தனது அமைச்சின் வாகனத் தொகுதியில் 2 ஜீப்கள் உட்பட 5 வாகனங்களை பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாகனங்கள் தற்போது அந்த அதிகாரியின் குடும்பத்தின் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் பெருமளவிலான அரச வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக அண்மையில் தேசிய கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டிருந்தார்.

பல அரச வாகனங்களை பயன்படுத்தும் உயர் அரசாங்க அதிகாரி - பேரப்பிள்ளைகளுக்கும் வழங்கியதாக தகவல் | Sri Lanka Government Vehicle Corruption Npp

அத்துதுடன், சுகாதார அமைச்சில் அதிகளவான வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அவர் தனது விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, சுகாதார அமைச்சுக்கு சொந்தமான அரச நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட வாகனங்களில் ஒன்று தற்போது அரச வங்கியில் பணிபுரியும் அவரது மகனால் பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல அரச வாகனங்களை பயன்படுத்தும் உயர் அரசாங்க அதிகாரி - பேரப்பிள்ளைகளுக்கும் வழங்கியதாக தகவல் | Sri Lanka Government Vehicle Corruption Npp

எதிர்வரும் நாட்களில் இந்த வாகனங்களின் பாவனை தொடர்பில் ஆராயப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன