வெளிநாட்டில் வேலை வழங்குவதாகக் கூறி பண மோசடி! பெண்கள் இருவர் கைது

வெளிநாட்டில் வேலை வழங்குவதாகக் கூறி பண மோசடி! பெண்கள் இருவர் கைது

முறையான அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட இரண்டு பெண்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் தென் கொரியாவில் வேலை பெற்றுத்தருவதாக கூறி மூன்று நபர்களிடம் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 15 லட்சம் ரூபாயும், இத்தாலியில் வேலை பெற்றுத்தருவதாக கூறி ஒருவரிடமிருந்து 730,000 ரூபாயும் பெற்றுள்ளார்.

எனினும், உறுதியளித்தபடி வேலை வழங்கப்படவில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைத்த 4 முறைப்பாடுகளின் அடிப்படையில் கண்டியில் வசிக்கும் பெண் ஒருவர் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் வேலை வழங்குவதாகக் கூறி பண மோசடி! பெண்கள் இருவர் கைது | Two Ladies Arrested For Fraud To Offer Jobs Abroad

இதையடுத்து, கைது செய்யப்பட்ட பெண்ணை கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, 4 வழக்குகளுக்கும் தலா 10 இலட்சம் ரூபா வீதம் 2 சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, 5 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு துபாயில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்வதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் கலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேகநபரை கலகெதர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, அவரை ஒக்டோபர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டில் வேலை வழங்குவதாகக் கூறி பண மோசடி! பெண்கள் இருவர் கைது | Two Ladies Arrested For Fraud To Offer Jobs Abroadஅத்துடன், சந்தேகநபருக்கு எதிரான மேலும் சில முறைப்பாடுகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவற்றை ஆராய்ந்த பின்னர் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.