பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, டி.ஏ.ராஜகருணா கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கு முன்னர் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின்  தலைவராக இருந்த சாலிய விக்ரமசூரிய நேற்றைதினம் பதவி விலகியிருந்தார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம் | New Chairman Appointed For Petroleum Corporation

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு நேற்று அனுப்பி வைத்திருந்தார்.

மேலும், குறித்த துறைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சருக்கு தாம் விருப்பமான சபையொன்றை நியமிப்பதற்கு சுதந்திரம் வழங்குவதற்காக அவர் தனது பதவிகளில் இருந்து விலகுவதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.