விவசாயிகளின் உர மானியம் குறித்து வெளியான புதிய தகவல்

விவசாயிகளின் உர மானியம் குறித்து வெளியான புதிய தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் மூலமாகவே உர மானியம் 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாவாக உயர்த்தப்பட்டதாக முன்னாள் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தாம் சமர்ப்பித்ததாகவும், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் வழங்குவதற்கு தேவையான பணத்தை முன்னாள் அரசாங்கத்தின் போதே ஒதுக்கப்பட்டதாகவும் மகிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவது மகிழ்ச்சிக்குரிய விடயம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

விவசாயிகளின் உர மானியம் குறித்து வெளியான புதிய தகவல் | Farmers Fertilizer Subsidy Increase From Octoberஇந்த நிலையில், பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு உரமானியத்தை ஹெக்டேயருக்கு 15,000 ரூபாவிலிருந்து 25000 ரூபா வரை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake)நேற்றையதினம் திறைசேரிக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது