தாயின் கவனயீனத்தால் உயிரிழந்த குழந்தை; தமிழர் பகுதியில் சோகம்

தாயின் கவனயீனத்தால் உயிரிழந்த குழந்தை; தமிழர் பகுதியில் சோகம்

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் தண்ணீர் நிரம்பிய தொட்டியில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவம் நேற்று (22) காலை இடம்பெற்றுள்ளதோடு, சம்பவத்தில 11 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

தாயின் கவனயீனத்தால் உயிரிழந்த குழந்தை; தமிழர் பகுதியில் சோகம் | Child Dies Due To Mother S Negligenceகுழந்தை தனது தாயுடன் குளியலறையில் இருந்த போது தண்ணீர் நிறைந்த தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கியுள்ளது.

இதனையடுத்து மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.