கொரோனா மரணங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் மெக்ஸிகோ..!

கொரோனா மரணங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் மெக்ஸிகோ..!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அதிகளவான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ள நாடுகள் பட்டியலில் மெக்ஸிகோ 3ஆவது இடத்தில் உள்ளது.

அங்கு இதுவரையில் 46,688 பேர் குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்

அந்நாட்டில் இதுவரையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 24,637ஆக பதிவாகியுள்ளது

இதுவரையில் 46,204 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள பிரித்தானியாவே இதுவரையில் மூன்றாவது இடத்தில் காணப்பட்டது.

எவ்வாறாயினும் மெக்ஸிகோ தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை விட அதிகளவான மரணங்கள் அங்கு ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட மெக்ஸிகோ கடந்த மே மாதம் நாட்டை மீண்டும் வழமைக்கு கொண்டுவரத் தொடங்கியது. ஜூன் மாதத்திற்குள் அனைத்து தொழிற்சாலைத் தொழிலாளர்களும் பணிக்குத் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.