கொழும்பில் கொடூரம்; இளைஞர் கைது

கொழும்பில் கொடூரம்; இளைஞர் கைது

  கொழும்பு, மருதானை - தேவநம்பியதிஸ்ஸ மாவத்தையில் நபரொருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 44 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவருக்கும் இளைஞன் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொலை சம்பவம் தொடர்பில் வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.