வவுனியா பாடசாலை மாணவன் திடீரென வைத்தியசாலையில் அனுமதி! வெளியான அதிர்ச்சி காரணம்

வவுனியா பாடசாலை மாணவன் திடீரென வைத்தியசாலையில் அனுமதி! வெளியான அதிர்ச்சி காரணம்

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பாடசாலை மாணவன் திடீரென வைத்தியசாலையில் அனுமதி! வெளியான அதிர்ச்சி காரணம் | Vavuniya School Student Took Drugs Hospital Admitt

வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலையில் தரம் 7 இல் கல்வி பயிலும் மாணவன் பாடசாலைக்கு முன்பாகவுள்ள கடை ஒன்றின் அருகில் இருந்த ஒதுக்கு புறமான இடம் ஒன்றிற்கு சென்றுவிட்டு மீண்டும் பாடசாலைக்குள் சென்றுள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் குறித்த மாணவன் தொடர்ச்சியாக வாந்தி எடுத்தமையால் பெற்றோருக்கு தெரியப்படுத்தி அவர்கள் ஊடாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பாடசாலை மாணவன் திடீரென வைத்தியசாலையில் அனுமதி! வெளியான அதிர்ச்சி காரணம் | Vavuniya School Student Took Drugs Hospital Admitt

இந்நிலையில், வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவன் தற்போது நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.