நுவரெலியா கிரகரி வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
நுவரெலியா - கிரகரி வாவியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா - பதுளை பிரதான வீதியில், கிரகரி ஏரியிலிருந்து நானுஓயா நீரோடைக்கு நீர் வெளியேறும் பாலத்துக்கு அருகில் நேற்று (06) குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வாவியில் படகுச் சேவையில் ஈடுபடுபவர்களால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அடையாளம் உறுதி செய்யப்படவில்லை
எனினும் உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.