பதவி விலகிய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சி.பி.அத்தலுவாகே பதவி விலகியுள்ளார்.
இது தொடர்பான பதவி விலகல் கடிதம் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தலுகே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிகள் தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளரின் தன்னிச்சையான தலையீடு மற்றும் தேவையற்ற செல்வாக்கு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தலுகே குறிப்பிட்டுள்ளார்.