யாழில் எம் பி அல்லாத ஆளும் கட்சி அமைப்பாளருக்கு பாரிய நிதி...! எழுந்துள்ள சர்ச்சை

யாழில் எம் பி அல்லாத ஆளும் கட்சி அமைப்பாளருக்கு பாரிய நிதி...! எழுந்துள்ள சர்ச்சை

யாழ். தேர்தல் மாவட்டத்தில் அபிவிருத்தி நிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஆளும் கட்சி அமைப்பாளருக்கு 19 கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளமை பேசுபொருளாக மாறி உள்ளது

இதேவேளை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி நிதியாக தலா ஐந்து கோடி ரூபாயே அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 5 கோடி ரூபா நிதி தற்போது 6 நாடாளுமன்ற உறுப்பினர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda), நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி.விக்னேஸ்வரனுக்கான (C. V. Vigneswaran) நிதி இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

இதேநேரம் எட்டாவது நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதனுக்கு 15 கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான அபிவிருத்தி நிதிகளுக்கான நிதியை மாவட்ட செயலகத்திற்கு விடுவித்மையோடு நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தலைவராக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் விஜயகலா மகேஸ்வரனால் சிபார்சு செய்யப்பட்ட 19 கோடி ரூபா பெறுமதியிலான திட்டங்களுக்கும் விஜயகலா மகேஸ்வரனின் பரிந்துரை எனக் குறிப்பிட்டு நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.