அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கைதான இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!
கொழும்பு - அத்துருகிரிய பகுதியில் சுரேந்திர வசந்த பெரேரா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான இளம் பெண் இன்று (21) கடுவலை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை 48 மணித்தியாலம் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கைக்கு பதில் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

குறித்த இளம் பெண் இன்றையதினம் (21-07-2024) அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கு உதவியதற்காகவே மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.