தென்னிலங்கையில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்பு
வத்தளை - எலகந்த பகுதியில் அமைந்துள்ள கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது இன்று காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

எலகந்த பகுதியில் அமைந்துள்ள கால்வாயில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026