திருகோணமலையில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு
திருகோணாமலை- தம்பலகாமம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கூட்டாம் புளி எனும் பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை அன்பு வழிபுரத்தைச் சேர்ந்த சிவலிங்கம் ஜெயசீலன் என தம்பலகாமம் பொலீசார் தெரிவித்தனர்.

விவசாயி ஒருவர் தனது வயலுக்குச் சென்ற வேளையில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டதை அடுத்து தம்பலகாமம் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து அவ்விடத்துக்கு வந்த தம்பலகாம போலீசார் சடலத்தை மீட்டுள்ளனர் . மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகமம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.