டெல்லி முதல்வருக்கு கொரோனா தொற்று..?
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், டெல்லி மாநில முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால்க்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக நாளை அவர் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 51 வயதுடைய கெஜ்ரிவால் நேற்றைய தினம் சுகயீனம் காரணமாக தமது உத்தியோகபூர்வ கடமைகள் அனைத்தையும் இரத்துச் செய்திருந்தார். இதன் காரணமாக டெல்லியில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கான அவதான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 2 இலட்சத்து 56 ஆயித்தை கடந்துள்ள நிலையில், அங்கு 7135 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.