மனைவி மற்றும் பிள்ளைகள் வெளிநாட்டில்! இலங்கையில் கணவருக்கு நேர்ந்த சோகம்

மனைவி மற்றும் பிள்ளைகள் வெளிநாட்டில்! இலங்கையில் கணவருக்கு நேர்ந்த சோகம்

காலி-ரத்கம, ரணபனாதெனிய பிரதேசத்தில் ஒருவரை தேங்காய் உரிக்கும் கருவியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை நேற்று(14) மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ரத்கம, ரணபனதெனிய பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் தென்னை காணியின் உரிமையாளராவார்.

மனைவி மற்றும் பிள்ளைகள் வெளிநாட்டில்! இலங்கையில் கணவருக்கு நேர்ந்த சோகம் | Stabbed To Death With A Coconut Peeler

இறந்தவருக்குச் சொந்தமான தென்னை காணியில் சந்தேகநபர் 10 தேங்காய்களை பறித்து விற்பனை செய்ததாகவும் அது தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அதிகரித்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் துபாயில் வசித்து வருவதாகவும் இறந்தவருடன் அவரது தாயும் அவரது தாயாரின் சகோதரியும் வசித்து வருவதாகவும், பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மனைவி மற்றும் பிள்ளைகள் வெளிநாட்டில்! இலங்கையில் கணவருக்கு நேர்ந்த சோகம் | Stabbed To Death With A Coconut Peeler

ரத்கம, கனேகொட, வலகட பகுதியைச் சேர்ந்த 49 வயதானே நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபர் இன்று (15) காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.