சிறை வளாகத்திற்குள் போதைப் பொருட்களை வீசிய நபர்: விரைந்து செயற்பட்ட பொலிஸார்

சிறை வளாகத்திற்குள் போதைப் பொருட்களை வீசிய நபர்: விரைந்து செயற்பட்ட பொலிஸார்

சிறைச்சாலைக்குள் கஞ்சா மற்றும் புகையிலையை வீசிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலனறுவையிலுள்ள சிறைச்சாலை வளாகத்திற்குள்ளேயே இவ்வாறு வீசப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதனை வீசிய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சந்தேக நபர் 1 கிராம் 590 மில்லகிராம் கஞ்சா மற்றும் 56 கிராம் 150 மில்லிகிராம் புகையிலையினை சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலனறுவ பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலனறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.