தேங்காய் உரித்துக்கொண்டிருந்தவர் கொலை; நடந்தது என்ன..

தேங்காய் உரித்துக்கொண்டிருந்தவர் கொலை; நடந்தது என்ன..

  காலியில் ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரப்பனாதெனிய பகுதியில் நேற்று இரவு (12) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவர் ரத்கம, ரப்பனாதெனிய பகுதியில் வசிக்கும் 60 வயதுடைய தேங்காய் வியாபாரி என பொலிஸார் கூறியுள்ளனர்.

தேங்காய் உரித்துக்கொண்டிருந்தவர் கொலை; நடந்தது என்ன? | A Man Who Was Peeling Coconuts Was Killed

சம்பவத்தின் போது இவர் வெளிநாட்டில் உள்ள தனது இளைய சகோதரியின் பூட்பட்ட வீட்டிற்குச் சென்று தேங்காய் உரித்துக்கொண்டிருக்கும் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவரது சடலம் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.