அரச புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவல்: யாழில் 17 பேர் கைது

அரச புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவல்: யாழில் 17 பேர் கைது

யாழ். (Jaffna) நெல்லியடி பகுதியில் பொலிஸாரினால்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (12.07.2024) அதிகாலை நெல்லியடி - துன்னாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அரச புலனாய்வாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், இராணுவம் பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன் குறித்த 17 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது, நீதிமன்றால் உத்தரவிடப்பட்ட திறந்த பிடியாணைகள், பிடியாணைகள், சட்டவிரோத மதுபானமான விற்பனையாளர்கள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் என 17 பேர் செய்யப்பட்டுள்ளனர்.

அரச புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவல்: யாழில் 17 பேர் கைது | 17 Were Arrested In Nelliyadiமேலும், கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளனர்.