போலியான அழகுசாதனப் பொருட்கள் விற்பனை: இருவர் கைது

போலியான அழகுசாதனப் பொருட்கள் விற்பனை: இருவர் கைது

போலியான அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்து காட்சிப்படுத்திய இரண்டு சந்தேகநபர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கண்டி தலதா வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

போலியான அழகுசாதனப் பொருட்கள் விற்பனை: இருவர் கைது | Selling Counterfeit Cosmetics Warrning

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 42 மற்றும் 60 வயதுடைய மடவளை மற்றும் கண்டி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.