பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்

பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்

நாட்டில் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுங்க திணைக்களத்தின் விடுவிப்பு அலுவலர்களை மேற்கோள்காட்டி இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில் சுங்க திணைக்களத்தை சேர்ந்த பணியாளர்களால் சுகவீன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டமையால் துறைமுகங்களில் தேங்கிக்கிடந்த பொருட்களை மேற்பார்வை செய்து விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல் | Commodity Prices Are Increase

அதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.