யாழில் நேர்ந்த பயங்கரம் ; வீட்டை தீக்கிரையாக்கி கொள்ளையடித்த இருவர் கைது

யாழில் நேர்ந்த பயங்கரம் ; வீட்டை தீக்கிரையாக்கி கொள்ளையடித்த இருவர் கைது

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பத்தாம் வட்டாரப்பகுதியில் வீடு ஒன்று எரியூட்டப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டமை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று(10.07.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, புங்குடுதீவு பதினொராம் வட்டாரத்தை சேர்ந்த மயூரன் எனும் நபரும் வல்லன் பகுதியை சேர்ந்த ஆட்காட்டி என்றழைக்கப்படுகின்ற ராசலிங்கம் என்பவருமே ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் நேர்ந்த பயங்கரம் ; வீட்டை தீக்கிரையாக்கி கொள்ளையடித்த இருவர் கைது | Arrested Two People Who Set House Fire And Robbed

இந்த இரு நபர்களும் புங்குடுதீவில் தொடர்ச்சியாக பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றவர்களென்றும் ஆட்காட்டி என்றழைக்கப்படுகின்ற ராசலிங்கம் என்பவர் பதிவுகள் ஏதுமின்றி கிராமத்தில் வாழ்ந்துவருவதாகவும் இதுதொடர்பாக வேலணை பிரதேச செயலக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்றும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.