வாடகை வீடுகளில் வசிப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

வாடகை வீடுகளில் வசிப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

வாடகைக் குடியிருப்பாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் உரிமைகளை சமமாக பாதுகாக்கும் நோக்கத்துடன் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும் அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 1972 ஆம் ஆண்டின் 7 ஆம், இலக்க வீட்டு வாடகைச் சட்டம் நீக்கப்பட்ட பின்னரே இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் ,இலக்க வீட்டு வாடகைச் சட்டத்தை நீக்குவதற்கான சட்ட வரைபை தயாரிப்பதற்காக அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.