19.6 மில்லியன் நிதி மோசடி; தனியார் நிறுவன அதிகாரி கைது!
போலி தங்க ஆபரணங்களைப் பயன்படுத்தி 19,6 மில்லியன் ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன் அதிகாரி பதுளை பொலிஸ் பிரிவின் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பதுளையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் தங்க நகைகளை அடகு வைக்கும் பிரிவில் பணியாற்றிவந்த அதிகாரி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அதோடு சந்தேகநபரிடம் இருந்து 41 போலி தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். நிதி நிறுவனத்தில் மக்கள் நகைகளை அடகு வைக்கும் போது அவர் போலியான ஆவணங்களை அவர்களுக்கு வழங்கி வந்துள்ளார்.
அத்துடன் தங்க ஆபரணங்களுக்கு சமமான போலி ஆபரணங்களை இணையம் மூலம் இறக்குமதி செய்து அதனை குறிப்பிட்ட ஆபரணங்களின் பைகளில் இட்டு உண்மையான நகைகளை அடகு வைத்து பணம் பெற்று வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.