யாழில் காவல்துறையினர் மீது தாக்குதல்: நான்கு இளைஞர்கள் அதிரடியாக கைது
யாழ்ப்பாணத்தில் (Jaffna) காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் திருகோணமலையை (Trincomalee) சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பேருந்து நிலையத்தில் நேற்று இரவு இளைஞர்கள் குழு ஒன்று அமைதியின்மையை ஏற்படுத்துவதாக யாழ்ப்பாண காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து, பேருந்து நிலையத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கு அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.
இதன்போது, இளைஞர்கள் குழு காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
தாக்குதலில் இரண்டு காவல்துறையினர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நான்கு இளைஞர்களும் காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டமை, கடமைக்கு இடையூறு விளைவித்தமை, பொது இடத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள நான்கு இளைஞர்களையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரவித்துள்ளனர்.