வவுனியா வைத்தியசாலையில் ஊசிக்கு பயந்து தப்பியோடிய நபர் சடலமாக மீட்பு! அதிர்ச்சி சம்பவம்

வவுனியா வைத்தியசாலையில் ஊசிக்கு பயந்து தப்பியோடிய நபர் சடலமாக மீட்பு! அதிர்ச்சி சம்பவம்

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பியோடிய நபர் வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்புதுக்குளம், ராணிமில் வீதி சந்திப் பகுதியில் 29 ஆம் திகதி இரவு குறித்த சடலம் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா வைத்தியசாலையில் ஊசிக்கு பயந்து தப்பியோடிய நபர் சடலமாக மீட்பு! அதிர்ச்சி சம்பவம் | Vavuniya Hospital Escaped Man Recovered Dead Body  இச்சம்பவத்தில் வவுனியா, ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த லியோசியஸ் டெல்சன் என்பவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஊசி போடுவதற்கு பயந்து வைத்தியசாலையில் இருந்து விடுகை பெறாது இரவு தப்பி வீடு நோக்கி சென்றுள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் ஊசிக்கு பயந்து தப்பியோடிய நபர் சடலமாக மீட்பு! அதிர்ச்சி சம்பவம் | Vavuniya Hospital Escaped Man Recovered Dead Body

இந்த நிலையில் வவுனியா, கோவில்புதுக்குளம், ராணிமில் சந்தியில் மரணமடைந்த நிலையில் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் அச் சடலத்தை மீட்டனர்.

வீதியில் சென்ற வாகனம் குறித்த நபர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் இதன் காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்தும் வவுனியா பொலிஸார் மற்றும் போக்குவரத்து பொலிஸார் ஆகியோர் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.