யாழ். சாவகச்சேரியில் வாகன விபத்து: வைத்தியர் உட்பட இருவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் (jaffna) - சாவகச்சேரி இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி வைத்தியர் ஒருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (30) சாவகச்சேரி (Chavakachcheri) - நுணாவில் A-9 வீதியில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், வைத்தியர் பயணித்த காரும், பொதுமகன் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் ஏ-9 வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், விபத்து குறித்து சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.