இன்று முதல் பேருந்து கட்டணம் குறைப்பு
இன்று (01) முதல் திட்டமிட்டபடி பேருந்து கட்டணத்தை 5.07% குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 28 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின்படி கட்டணங்கள் எவ்வாறு திருத்தப்படும் என்பதை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று இடம்பெற்றது.
இதற்கமைய மநாட்டில் கலந்து கொண்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.
அதன்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலைகள் வெளியாகியுள்ளது.
ஒக்டேன் 92 பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 ரூபாயால் குறைந்து புதிய விலை 344 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 ரூபாயால் குறைந்து புதிய விலை 379 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாயால் குறைந்து 355 ரூபாவாக புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் இலங்கை வெள்ளை டீசல் 317 ரூபாவாகவும், ஆகவும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 202 ரூபாவாகவும் காணப்படுகிறது.