யாழில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு

யாழில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு

இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட விளான் பகுதியில், சுண்ணாம்பு சூளைக்கு அருகில் மயங்கி விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் (27.06.2024) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் விளான் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய மனுவல் அன்ரன் மரியதாஸ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் (27) சுண்ணாம்பு சூளைக்கு வேலைக்காக சென்றுள்ளார்.

யாழில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு | Jaffna Man Death Today Unconscious Near Lime Kilnஅவர் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ள நிலையில் அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு | Jaffna Man Death Today Unconscious Near Lime Kilnமேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.