யாழ். இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை சம்பவம் ; மூன்று சந்தேகநபர்களும் கைது

யாழ். இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை சம்பவம் ; மூன்று சந்தேகநபர்களும் கைது

யாழ். நெடுந்தீவில் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற படுகொலையுடன் நால்வர் தொடர்புபட்டனர் என்று செய்திகள் வெளிவந்திருந்தன.

யாழ். இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை சம்பவம் ; மூன்று சந்தேகநபர்களும் கைது | A Youth Was Beaten To Death In Jaffna Police Aracdஅவர்களில் ஒருவர் விபத்துக்குள்ளான நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார். எஞ்சிய மூன்று சந்தேகநபர்களும் நெடுந்தீவுப் பகுதியில் உள்ள பற்றைகளில் மறைந்திருந்த வேளை நேற்று (22) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும்  யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டுள்ளனர்.