யாழில் ஐந்து வாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

யாழில் ஐந்து வாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

யாழில்(Jaffna) ஐந்து வாள்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த கைது நடவடிக்கை இன்று(21.06.2024) இடம்பெற்றுள்ளது.

 

இலங்கையின் பொலிஸ் அதிகாரிகளுக்கு இந்தியாவில் சிறப்புப் பயிற்சி

இலங்கையின் பொலிஸ் அதிகாரிகளுக்கு இந்தியாவில் சிறப்புப் பயிற்சி

 

மேலதிக விசாரணை

 

 

 யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த  யாழ்ப்பாணம் பொலிஸார் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் வாகனத்தின் வழிமறித்து சோதனையிட்ட நிலையில் வாகனப்பதிவின்றி வாகனம் பயணித்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த இளைஞரை கைது செய்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் சந்தேக நபரது வீட்டிலிருந்து ஐந்து வாள் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழில் ஐந்து வாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது | Suspect Arrested With Five Swords In Jaffnaமேலும், சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.