யாழில் முன்பகையால் நேர்ந்த விபரீதம் ; பொதுமக்களால் எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட நபர்

யாழில் முன்பகையால் நேர்ந்த விபரீதம் ; பொதுமக்களால் எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட நபர்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் நேற்று இரவு எரியூட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருதங்கேணியை சேர்ந்த 43 வயதுடைய பவானி என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று இரவு வத்திராயன் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக உறங்கியுள்ளார்.

யாழில் முன்பகையால் நேர்ந்த விபரீதம் ; பொதுமக்களால் எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட நபர் | A Person Rescued With Burns By Civilians In Jaffna

இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் எரிகாயங்களுடன் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த வேளை, பொதுமக்களால் மீட்கப்பட்டு, மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மந்திகை ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. எனினும் முன்பகை காரணமாக பெற்றோல் குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதா..? என்ற கோணத்தில், மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.