யாழ். நெடுந்தீவு இளைஞன் கொலை... காயங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

யாழ். நெடுந்தீவு இளைஞன் கொலை... காயங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு இளைஞர் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரை பொலிஸார் தேடி வருகின்ற நிலையில் ஒரு சந்தேக நபர் இன்று (20) காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸார் வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

யாழ். நெடுந்தீவு இளைஞன் கொலை... காயங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது! | Jaffna Neduntheevu Youth Murder Suspect Arrested

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காயமடைந்த சந்தேக நபரும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழ். நெடுந்தீவு இளைஞன் கொலை... காயங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது! | Jaffna Neduntheevu Youth Murder Suspect Arrestedஇந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட 4 சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஏனைய 3  சந்தேக நபர்களையும் தேடி கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.