மயிலிறகை வீட்டில் வைத்திருக்கலாமா?

மயிலிறகை வீட்டில் வைத்திருக்கலாமா?

முருகனின் வாகனம் மயில், தேசிய பறவை மயில், மயிலிறகை புத்தகத்தில் வைத்தால் குட்டிப்போடும், என்பது வரை மட்டுமே நமக்கு தெரியும். அழகுக்காக மயிலிறகை வீட்டில் வைத்திருப்போம். முருக பக்தர்கள் சிலர் தங்கள் வீட்டு பூஜையறையில் வைத்திருப்பர்.

மூன்று மயிலிறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும். வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயிலிறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வாஸ்து தோஷம் நீங்கும்.

நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயிலிறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யும். மயிலிறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும். ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயிலிறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்கும்.

திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கையறையில் மயிலிறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும். மயிலிறகு பரிகாரமாய் மட்டுமல்லாமல், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுவும் இதனை வீட்டின் சுவற்றில் வைத்தால், பல்லிகள் மற்றும் இதர பூச்சிகள் வருவதைத் தடுக்கலாம்.