வாகன இறக்குமதி மோசடியில் சிக்கிய பெண்: கோடிக்கணக்கில் ஏமாற்றப்பட்ட பணம்

வாகன இறக்குமதி மோசடியில் சிக்கிய பெண்: கோடிக்கணக்கில் ஏமாற்றப்பட்ட பணம்

வாகனங்களை இறக்குமதி செய்வதாகக்கூறி வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 15 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு அதனை மீள வழங்காமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணொருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

மாகொல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபருக்கு சொந்தமான சொகுசு கார், பல ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் மற்றும் இரண்டு மடிக்கனிணிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் தனது நண்பரின் ஊடாக சந்தேகநபரை அடையாளம் கண்டதாக வர்த்தகர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி மோசடியில் சிக்கிய பெண்: கோடிக்கணக்கில் ஏமாற்றப்பட்ட பணம் | Vehicle Import In Money Froudவாகனங்களை இறக்குமதி செய்வதாகக்கூறி சந்தேகநபர் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை சுங்கச்சாவடியில் இருந்து விடுவிக்க அவசரமாக பணம் தேவைப்படுவதாக கோரி குறித்த வர்த்தகரிடம் பணத்தினை பெற்றுக்கொண்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்பின்னர் குறித்த பெண் தம்மை சந்திக்கவில்லை என வர்த்தகர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண் பல பாரிய பண மோசடிகள் தொடர்பில் முன்னர் குற்றம் சுமத்தப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

வாகன இறக்குமதி மோசடியில் சிக்கிய பெண்: கோடிக்கணக்கில் ஏமாற்றப்பட்ட பணம் | Vehicle Import In Money Froudஇவருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், களுத்துறை பிரதான நீதவான் நீதிமன்றம் மற்றும் மாளிகாகந்த பிரதான நீதவான் நீதிமன்றில் பல பண மோசடி வழக்குகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக போலி கடவுச்சீட்டு தயாரித்தல், காசோலை வழங்குதல் போன்ற பல மோசடிகளில் சந்தேகநபரான பெண் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரான பெண், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.