பாடையில் ஏறிய பல்கலைக்கழக பட்டம்: யாழில் கவனத்தை ஈர்த்த போராட்டம்

பாடையில் ஏறிய பல்கலைக்கழக பட்டம்: யாழில் கவனத்தை ஈர்த்த போராட்டம்

பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி வேலையில்லா பட்டதாரிகள் யாழ்ப்பாணத்தில் (Jaffna) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று (09) இப்போராட்டம்  மேற்கொள்ளப்பட்டது.

குறித்த போராட்டமானது அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டோர் தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பாடையில் ஏறிய பல்கலைக்கழக பட்டம்: யாழில் கவனத்தை ஈர்த்த போராட்டம் | Jaffna Universtity Graduates Protestமேலும், போராட்டத்தில் கலந்துகொண்டோர், “பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது, படிப்பிற்கும் போராட்டம், வேலைக்கும் போராடுவதா, படித்ததற்கு கூலித்தொழிலா கடைசி வரைக்கும், படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா பல வருட கனவு வெறும் கனவாகவே போய்விடுமா? படித்தும் பரதேசிகளாக திரிவதா” என கோஷங்கள் எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.