கேரளாவில் இறந்த கர்ப்பிணி யானையின் நினைவாக சாக்பீஸ் சிற்பம்

கேரளாவில் இறந்த கர்ப்பிணி யானையின் நினைவாக சாக்பீஸ் சிற்பம்

கேரள மாநிலம் பாலக்கோடு வனப்பகுதியில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த கர்ப்பிணி யானை வெடி பொருள் வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை சாப்பிட்டு பலியானது. இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் விலங்கின ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இறந்த யானையின் நினைவாக மாமல்லபுரம் அரசினர் சிற்ப கலை கல்லூரியில் உலோக சிற்ப பிரிவில் 2ம் ஆண்டு படிக்கும் பிரேம்குமார் (வயது 25) சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார். வெள்ளை நிற சாக்பீசில் யானை துதிக்கையால் அன்னாசி பழத்தை எடுப்பது போல அழகுற வடிவமைத்துள்ளார். இறந்த யானையின் நினைவாக வடிக்கப்பட்ட இந்த சிற்பம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.