பட்டதாரிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி"

பட்டதாரிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி"

இறக்குமதி வர்த்தக முறைமைக்கு பதிலாக உள்நாட்டு உற்பத்திகளுக்கு முக்கியத்துவமளிக்கும் பொருளாதார செயற்பாடுகளுக்கு அரசாங்கம் வழி ஏற்படுத்தி உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.களுத்துறை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்விவசாயம் மற்றும் உற்பத்திகளில் ஈடுபட்டு, அதன்மூலம் அதிகபட்ச பயனை பெற்றுக் கொள்ள வேண்டும்.நவீன தொழிநுட்பத்தின் மூலம் விவசாய பொருளாதாரம் பலப்படுத்தப்பட வேண்டும்.அதற்காக விவசாயப் பயிர்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி, உள்நாட்டு அறுவடைகளுக்கு அதிக விலையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதேவேளை, பட்டதாரிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு ஒரு இலட்சத்து 50 தொழில்களை வழங்கும் நடவடிக்கை தேர்தலின் பின்னர் இடம்பெறும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.