புதனின் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்

புதனின் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்

ரிஷப ராசியில் புதன் பகவான் மே 31 அன்று மதியம் 12:02 மணிக்கு சஞ்சாரம் செய்வார். நவகிரகங்களில் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன், அறிவு, சாமார்த்தியம், வாக்கு வன்மை, முடிவெடுக்கும் திறன் என ஒருவரின் முக்கியமான ஆளுமையை நிர்ணயிப்பவர்.

புதனின் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் | Puthan Perchiyal Entha Rasikku Athirstam

வாழ்க்கையின் பல்வேறு முக்கியமான கட்டங்களிலும், நம்மை புதனின் நிலையே உயர்த்தும் அல்லது தாழ்த்தும். அப்படிப்பட்ட புகன் பகவானால் எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்க போகிறது என பார்ப்போம்.

ரிஷபம், மேஷம், கன்னி, மிதுனம், கும்பம் மற்றும் துலாம் ராசியினருக்கு புதன் பெயர்ச்சி அட்டகாசமான எதிர்காலத்தைக் கொடுக்கும்.

புதனின் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் | Puthan Perchiyal Entha Rasikku Athirstam

கும்பம் ராசி

சொத்துக்களில் முதலீடு செய்ய உகந்த நேரம். சொத்து வாங்குவதற்காக சுப செலவுகள் ஏற்படும். சொத்து வாங்கும்போதும் நல்ல லாபத்தில் விற்கலாம். ஆனால், எதிர்பாராத செலவுகளை ஈடுகட்ட நிதியை திறம்பட நிர்வகிக்க வேண்டும். புதனின் பெயர்ச்சி ஆக்கப்பூர்வமான பலன்களைக் கொடுக்கும் என்பதால், அனைவரிடமும் பாராட்டுகள் கிடைக்கும்

புதனின் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் | Puthan Perchiyal Entha Rasikku Athirstam

துலாம் ராசி

புதனின் பெயர்ச்சியால், துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத திருப்பங்களையும் அதிர்ஷ்டத்தையும் எதிர்கொள்ளும் வாய்ப்பு வரலாம். அதிர்ஷ்டம் இருக்கும் என்றாலும், அது சொத்து விஷயத்தில் வரும் என்று தெரிகிறது. அதிலும் பரம்பரை சொத்து தொடர்பான விஷயத்தில் மகிழ்ச்சி கிடைக்கலாம்

புதனின் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் | Puthan Perchiyal Entha Rasikku Athirstam

கன்னி ராசி

மிகவும் ஆற்றல் கொடுக்கும் புதன் பெயர்ச்சியினால், கன்னி ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். புதிய தொழில் அல்லது முயற்சியைத் தொடங்க சரியான நேரம் இது, புதிய உத்திகளையும் வகுத்து போட்டியாளர்களுடன் போட்டியிட முடியும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும் நேரம் இது

புதனின் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் | Puthan Perchiyal Entha Rasikku Athirstam

மிதுன ராசி

புதனின் இந்த சஞ்சாரத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு பண வரத்து அதிகரிக்கும். பணத்தை சேமிப்பதிலும் நல்ல முடிவெடுப்ப்பீர்கள். எதிர்காலத்திற்கான திட்டங்களும் உருவாகும் நேரம் இது

புதனின் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் | Puthan Perchiyal Entha Rasikku Athirstam

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுகு புதனின் சஞ்சாரம் அதிர்ஷ்டத்தைத் தரும். புதிய திட்டங்களைச் செயல்படுத்தினால் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனையும் ஆசீர்வாதமும் உங்களுக்கு நல்ல வழி காட்டும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு அதிகம்.

புதனின் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் | Puthan Perchiyal Entha Rasikku Athirstam

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு காரியத் தடைகள் நீங்கும். புதனின் மாற்றத்தால், மன மாற்றம் ஏற்படும் சமூகத்தில் அந்தஸ்து கூடும்

புதனின் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் | Puthan Perchiyal Entha Rasikku Athirstam

இந்த ஆறு ராசிக்காரர்கள் மட்டுமல்ல, அனைத்து ராசியினருமே புதன் பெயர்ச்சியன்று புதனுக்கு பூஜை செய்து வழிபட்டால், தீமைகள் விலகி நன்மைகள் வந்து சேரும்