சஜித்தின் கட்சி அலுவலகத்திற்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைப்பு

சஜித்தின் கட்சி அலுவலகத்திற்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைப்பு

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அலுவலகத்திற்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா – ஆடிமுல்லவில் அமைந்துள்ள சஜித் பிரேமதாஸவின் அலுவலகத்திற்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து காரணமாக 5 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் கட்சியின் திவுலப்பிட்டிய பிரதான ஏற்பாட்டாளர் ரோஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் தீ விபத்தினால் அலுவலகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீர் கொள்கலனொன்றும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.