கிளிநொச்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் வாகனம் விபத்து...! கடும் வாகன நெரிசல்

கிளிநொச்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் வாகனம் விபத்து...! கடும் வாகன நெரிசல்

கிளிநொச்சியில் (Kilinochchi) டிப்பர் வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று (25.4.2024) காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி பொது வைத்தியசாலை (District General Hospital Kilinochch) முன்பாக  இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதி ஓரத்தில் வைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புக்களுடன் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது. 

இவ் விபத்தில் டிப்பர் வாகனத்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கிளிநொச்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் வாகனம் விபத்து...! கடும் வாகன நெரிசல் | Tipper Lost Control And Crashed In Klinochchiஅதேவேளை, கிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்தை திறந்து வைப்பதற்காக இன்றையதினம் (25) அதிபர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe)  விஜயம் செய்யவுள்ளார்.

இந்நிலையில், நிகழ்வு இடம்பெறும் பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில், வாகன நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.