மட்டக்களப்பில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு (Batticaoloa) - வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு (23.05.2024) இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாங்கேணியைச் சேர்ந்த 41 வயதுடைய அனஸ்டன் ஹாரலஸ் அலேசியஸ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

One person drowned in sea water in Batticaloa

அத்துடன், உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

One person drowned in sea water in Batticaloa