தென்னிலங்கையில் கோர விபத்து: ஸ்தலத்தில் மூவர் பலி

தென்னிலங்கையில் கோர விபத்து: ஸ்தலத்தில் மூவர் பலி

காலியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

காலி -  பூஸ்ஸ, பிந்தலிய சந்தியில் உள்ள பாதுகாப்பு கடவையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

 இந்த விபத்து இன்று (23.05.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடருந்து கடவையின் பாதுகாப்பற்ற சமிஞ்சை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தென்னிலங்கையில் கோர விபத்து: ஸ்தலத்தில் மூவர் பலி | Road Accidents In Sri Lanka 3 Person Death Todayகுறித்த கடவையில் உரிய முறையில் சமிஞ்சை செயற்படவில்லை என நேரில் பார்த்த பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மூன்று பேர் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.