மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு
கெபித்திகொல்லேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யகாவெவ புதர் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்ததாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கெபித்திகொல்லேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
சக்கரை பொங்கலின் சுவையை அதிகப்படுத்தணுமா? இதை சேர்த்தால் போதும்
11 January 2025