அசிட் வீச்சில் பெண் உயிரிழப்பு; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

அசிட் வீச்சில் பெண் உயிரிழப்பு; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

அம்பலாங்கொடை பிரதேசத்தில் அசிட் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (20) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பிரேமலதா என்ற 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அசிட் வீச்சில் பெண் உயிரிழப்பு; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம் | Woman Dies In Acid Attack Sri Lanka

தனது வீட்டின் சமையல் அறையில் உணவு தயாரித்துக் கொண்டிருக்கும் போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபரொருவர் பெண் மீது அசிட் வீசியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனையடுத்து, காயமடைந்தவர் அயல் வீட்டாளர்களின் உதவியுடன் பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.