கொழும்பில் வெள்ள அபாய பகுதிகளாக 22 இடங்கள் அடையாளம்!

கொழும்பில் வெள்ள அபாய பகுதிகளாக 22 இடங்கள் அடையாளம்!

கொழும்பில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

மேலும், வடிகால் அமைப்புகளின் முறைகேடு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அதன் பொறியாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் வெள்ள அபாய பகுதிகளாக 22 இடங்கள் அடையாளம்! | 22 Places Identified As Flood Risk Areas Colombo

நீர் வடிந்து செல்லும் கால்வாய்களை அபிவிருத்தி செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக நிலவும் அதிக மழைவீழ்ச்சியுடனான காலநிலை காரணமாக அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம், துனமலே பகுதியில் அதிகரித்துள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அத்தனகலு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள் வெள்ளப்பெருக்கு தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.