மனம் திறந்த நடிகை!

மனம் திறந்த நடிகை!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை அனஸ்வரா ராஜன். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சுஜாதா என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் மஞ்சு வாரியரின் மகளாக அனஸ்வரா நடித்திருந்தார்.

அதன்பிறகு அனஸ்வரா, தண்ணீர் மாத்தன் தினங்கள் படத்தின் மூலம் அதிக கவனம் பெற்றார் அனஸ்வரா. இப்படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்க அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து இப்போது ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறியுள்ளார்.

திரிஷா நடிப்பில் வெளிவந்த ராங்கி டத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இதையடுத்து இவருக்கு தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அனஸ்வரா ராஜான், தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் 4 ஆம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன். அப்போது நான் பேருந்தில் சென்று கொண்டு இருந்த சமயத்தில் ஒருத்தர் என் என் முன்னாடி உக்காந்து சுய இன்பம் செய்து கொண்டு இருந்தார்.

அந்த வயதில் என்னால் அதை புரிந்து கொள்ள கூட முடியவில்லை. அந்த நபர் எதற்கு என்னிடம் அதை காட்டினார் என்பதை கூட தெரியவில்லை. இப்போது அந்த சம்பத்தை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது. நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தையிடம் அப்படி நடந்துகொண்டார். இந்த மாதிரியான ஆட்கள் எப்படி பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். அந்த விஷயத்தை யோசித்து பார்த்த பயமா இருக்கிறது என்று அனஸ்வரா கூறியுள்ளார்.