அடுத்த வருடம் முதல் மீண்டும் வாகன இறக்குமதி

அடுத்த வருடம் முதல் மீண்டும் வாகன இறக்குமதி

வாகன இறக்குமதி அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஷெஹான் சேமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை.

அடுத்த வருடம் முதல் மீண்டும் வாகன இறக்குமதி | Import Of Vehicles Again From Next Yearஇதுவரை பொருளாதார செயல்முறை மற்றும் வணிக செயல்முறையை நாடுபவர்கள் மட்டுமே வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் எதிர்காலத்தில் அந்த கட்டுப்பாடு தளர்த்தப்படும்.

மேலும், நாட்டில் தற்போதுள்ள பொருளாதார வேலைத்திட்டத்தை தவிர வேறு வழியில்லை இவ்வாறு ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.