பயணசீட்டுக்களில் மோசடி: நடைமுறைப்படுத்தப்படவுள்ள அதிரடி சட்டம்

பயணசீட்டுக்களில் மோசடி: நடைமுறைப்படுத்தப்படவுள்ள அதிரடி சட்டம்

பயணச்சீட்டு மோசடிகள் தொடர்பிலான சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள மேலதிக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை இலங்கை போக்குவரத்து சபை (Sri Lanka Transport Board) தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இப்பணிகளை முன்னெடுப்பதற்கு ஏனைய திணைக்கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் (Lalith de Alwis) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நியாயமற்ற பயணசீட்டுக்களின் விலைகள் தொடர்பான சிக்கலைக் குறைப்பதற்கும் மற்றும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும் பாதுகாப்புப் படையினருடன் நடமாடும் குழுக்கள் இந்த சோதனைகளை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணசீட்டுக்களில் மோசடி: நடைமுறைப்படுத்தப்படவுள்ள அதிரடி சட்டம் | Roundup On Bus Ticket Scamsமேலும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது வழங்கப்படும் பயணசீட்டுக்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை மட்டுமே செலுத்துமாறு லலித் டி அல்விஸ் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.