
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி விபரம் அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது அப்பாஸ், வஹாப் ரியாஸ், யாசிர் ஷா, சர்பராஸ் அகமது உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், மீதமுள்ள ஒன்பது வீரர்கள் ஃபக்கர் சமான், ஹைதர் அலி, இப்திகர் அகமது, இமாத் வாசிம், குஷ்டில் ஷா, முகமது ஹபீஸ், முகமது அமீர், முகமது ஹஸ்னைன் மற்றும் மூசா கான் ஆகியோர் தொடர்ந்து ரி-20 தொடருக்கான அணியுடன் பயிற்சி பெறுவார்கள்.
முழுமையான அணி விபரம் இதோ.
அசார் அலி, பாபர் அசாம், அபிட் அலி, அசாத் ஷபிக், பஹீம் அஷ்ரப், ஃபவாட் அலாம், இமாம்-உல்-ஹக், இம்ரான் கான், காஷிஃப் பட்டி, முகமது அப்பாஸ், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சர்பராஸ் அகமது, சதாப் கான், ஷாஹீன் அப்ரிடி, ஷான் மசூத், சோஹைல் கான், உஸ்மான் ஷின்வாரி, வஹாப் ரியாஸ் மற்றும் யாசிர் ஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 5ஆம் திகதி மன்செஸ்டரில் நடைபெறவுள்ளது